Saturday, September 27, 2014

மதமாற்று தடைச் சட்டம்

தீண்டாமையை ஒழிக்க முடியாதவர்கள். விதவைக்கு மறுவாழ்வு அளிக்க முடியாதவர்கள், வாழ்வுரிமை அளிக்க முடியாதவர்கள், சிறுபான்மையினர், பெரும்பான்மையினராக மாறிவிடுவார்கள் என்று அச்சநிலையின் காரணமாக கொண்டு வரப்பட்டசட்டம்தான்
கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் 2002 (செப்டம்பர்).

இந்த மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றிதெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் சில
விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.இந்த சட்டம் இந்தியாவில் 9, 2002ல்பிரகடனப்படுத்தப்பட்டது இல்லை. ஒரிசாமாநிலத்தில் ஒரிசா மத சுதந்திரம் சட்டம் 1967
இதனைத் தொடர்ந்து 1968 மத்திய பிரதேசத்தில் மத்திய பிரதேச சுகாதாத்திர ஆதினியம்
27இல் 1968 கொண்டு வரப்பட்டது.இந்த சட்டம் கொண்டு வர மிக முக்கிய
காரணம் என்று சொல்லப்படுவது.2002 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் புகார்
அதிகம்.
(1) சட்டமன்றத்தில் விவாதித்தபோது ஓர்
புகார் கூட ஆதாரமாக எடுத்து வைக்க
முடியவில்லை.

(2) அவர் சொன்னது, மதுரையில்
மதமாற்றுவதற்காக ரூ. 2000 கொடுத்து
தாழ்த்தப்பட்டவர்கள், கிறிஸ்தவ மதத்திற்கு
மாற்றினார்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.

(3) ஆனால் ஆதாரபூர்வமாக எதையும் தர
முடியவில்லை. ஆனால் எதற்கு மாறினார்கள்
என்பது பிறகு பார்ப்போம். அதற்கு முன்பாக
இந்தச் சட்டம் எதை குறை கூறுகிறது என்று
பார்ப்போம்.

(4) மூன்று விஷயங்களை செய்யவில்லை
என்றால் மூன்று ஆண்டு காவல் ரூபாய் 50,000
முதல் 1 லட்சம் அபராதம்.
- ஆசை காட்டுதல்
- மதமாற்ற முயற்சி செய்தால் தகவல் கொடுக்க வேண்டும்
- ஆசை காட்டுதல்

உனக்கு சம உரிமை கொடுக்கப்படும்.இறைவனை வணங்கும் பள்ளிவாசல்களிலும்,
திருமணத்திலும், எல்லாச் சுயதுக்க காரியத்திலும் உனக்கு சம உரிமை அளிக்கப்படும்
என்று கூறுவதும் ஆசை காட்டுதலில்அடங்கும்.

உனக்கு சொர்க்கம் உண்டு என்றுகூறினாலும், ஆசை காட்டுதலில் அடங்கும்.மதமாற்ற முயற்சி செய்தல்உண்மையான மார்க்கத்தை எடுத்துச்சொல்வதற்காக தாவா  செய்தாலும்
மதமாற்ற முயற்சி செய்தல்’ என்று கூறிபிரச்சனை செய்ய இயலும்.
தனி ஒரு மனிதரிடம் தாவா செய்தாலோ,அல்லது அவர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து
கொள்வதற்கு கேட்டாலோ மதமாற்ற முயற்சி செய்தல் என பிரச்சனை செய்யலாம்.

தகவல் தர வேண்டும் (தாசில்தார் அல்லது
நீதிபதிக்கு)

1. தகவல் கொடுத்தாலும் சரியான
முறையில் தகவல் வரவில்லை என்று கூறி
மதம் மாறியவர்களை பிரச்சனைக்கு
உருவாக்கலாம்.

2. எத்தனை பேர் எந்தெந்த ஊர், யார் யார்
தாவா செய்கிறார்கள் என்று இதன்மூலம்
அறிந்து, இதைப்போல் பல சட்டங்களைக்
கொண்டு வந்தும் அவர்களை பிரச்சனைக்கு
உள்ளாக்கியும் தாவாக்களை நடக்க
முடியாமல் செய்யலாம்.

இதுபோன்ற பிரச்சனைகள் முஸ்லிம்களுக்குபெரிது இல்லை
இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றுவதற்காக இதுபோன்ற பல சட்டங்களை
இயற்றியும் அகற்றியும் (தடா போல)இருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கொடுத்த குர்ஆனிய சட்டத்தை(ஷரியத் சட்டம்) பின்தொடர்ந்து செல்லும்வரைக்கும் இதுபோன்ற எத்தனை வந்தாலும் பிரச்சனை இல்லை.
இன்ஷா அல்லாஹ் இதற்குதான் தாருல்இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட் அப்போது
திருவி நடத்திவந்த விடியல் வெள்ளிபத்திரிகையில் இதைப்போன்ற பிரச்சனைகள்
வரும்போது எங்களை தொடர்பு கொள்ளுங்கள். மனித நீதி பாசறையில் சட்ட
உதவிக்குழு தயாராக இருக்கிறது என்றுகூறியிருந்தோம். மேலும் விவரங்களுக்கு
விடியல் வெள்ளி (நவம்பர் 2002).

ஏன் மதம் மாறுகிறார்கள்?

தீண்டாமையின் கொடுமை காரணங்களினாலும், தீண்டாமை, பார்க்காமை, பலகாமை
போன்ற கொடுமைகளின் காரணமாகவேதவிர பணத்திற்காகவோ கட்டாயப்படுத்தி
யோ ஆசைக் காட்டுதலின் காரணமாகமாறுதல் இல்லை.உதாரணத்திற்கு காஞ்சிபுரம் அருகில்
உள்ள கூத்தரம்பாக்கம் கிராமத்தில் 50 தலித்குடும்பத்தினர்கள் இஸ்லாத்திற்கு மாறி
னார்கள். தங்கள் ஊரில் இருக்கும் மாரியம்மன் தேர் தங்களின் தெருவிற்கு
வருவதற்காக 1979 முதல் பல வருடங்கள்போராடி வந்தும் தேர் தெருவுக்குள் வர
வில்லை. இந்த பிரச்சினையை சமாளிப்பதற்காக அப்போது அமைச்சராக
எஸ்.டி.சோமசுந்தரம் உங்கள் தெருவிற்கு ஒருகோவில் கட்டித் தருவதாக கூறினார். அந்த
கிராமத்தின் மக்கள் எங்களிடம் காசுஇல்லாமல் இல்லை. கோவில் தேவை
என்றால் நாங்களே கட்டிக்கொள்வோம் என்றுகூறினார்கள். அவர்கள் எதிர்பார்த்தது சம
உரிமையே.(ஆதாரம்: மதமாற்றம் தடைச் சட்டம்
தமிழ்நாட்டை பார்ப்பன நாடாக்கும் சதியே.
வெளியிடுவோர் மக்கள் கலை இலக்கியக்
கழகம்)

திருவிதாங்கூர் அதாவது இன்றையகன்னியாகுமரி மாவட்டம் 1800களில் நாடார்
சமூகத்தில் சேர்ந்தவர்களை சாணார்கள் எனஅழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சமூக
கட்டுப்பாடுகள் இருந்தன. ஆண்கள் மீசைவளர்க்கக் கூடாது, தலப்பா கட்டக் கூடாது,
பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது, பெண்களுக்கு மார்பகங்களுக்கு கூட
வரி கட்டாவிட்டால் பெண்களுடையமார்பகங்கள் அறுக்கப்பட்டன. பெண்கள்
இடுப்பில் தண்ணீர் எடுக்கக் கூடாது.தலையில் தான் எடுக்கவேண்டும். பசு வளர்க்கக்கூடாது, ஓடு வேளிணிந்த வீடுகள் கட்டக்கூடாது,தொழிற்சாலைகள், பாலங்கள், கிணறுகளை
உபயோகிக்கக்கூடாது. உயர் சாதிகள்இருக்கும் சாலை வழிகளில் போகக் கூடாது.
இதுபோன்ற தீண்டாமையின் காரணமாகத்தான் மதம் மாறினார்கள். பொருளாதாரத்
திற்காக மாறவில்லை. சமூக ரீதியில்தாழ்த்தப்பட்ட காரணத்திற்காக மாறினார்கள்.ஏனென்றால், அன்றைய சூழலில் அங்குபொருளாதாரத்தில் மேம்பட்டு இருந்த
தாங்கள் மற்றும் நாஞ்சி நாட்டு வெள்ளாளர்போன்ற உயர்சாதி இந்துக்களைப் போன்ற
நாடார்களும் பொருளாதார ரீதியாக
மேட்பட்டு இருந்தனர்.மதமாற்றம் என்பது பொருளாதாரத்தின்
அடிப்படையாக நடைபெறுவது என்பது இதன்மூலம் அடிபட்டு போகிறது.

திப்பு சுல்தான் நடவடிக்கை எடுத்தார்

* திப்பு சுல்தான் திருவிதாங்கூர் அரசருக்கு ஒரு
கடிதம் எழுதுகிறார். நான் ஊர் வழியாகச்
சென்றபோது அங்குள்ள பெண்கள்
இடுப்புக்கு மேல் ஆடை அணியாமல்
இருந்ததைப் பார்த்தேன். அவர்கள் என்ன
காரணத்தால் ஆடை அணியவில்லை?

* ஒருவேளை வறுமை காரணமாக ஆடை
அணியவில்லை என்றால் அவர்களுடைய
வருமானத்தை மேம்படுத்த வழி செய்யுங்கள்.

* அல்லது சமூகக் கட்டுப்பாடுகள்
காரணமாக அணியவில்லையா?
இத்தனை நாட்களுக்குள் ஒரு தேதியைக்
குறிப்பிட்டு அதைச் சரிசெய்து ஆடை
அணியச் செய்ய வேண்டும். இல்லையென்
றால் நான் உங்கள் மீது போர் தொடுத்து அந்த
மக்களை மாற்றுவதைத் தவிர எனக்கு வேறு
வழியில்லை.

* 1899 சிவகாசியில் நாடார்கள்
கோவிலுக்குள் நுழைய முயன்றபோது
உயர்சாதி இந்துக்களால் அடித்து கடுமையாக
தாக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இது சம்பந்தமாக இங்கிலாந்தில் உள்ள
பிரைவி கவுன்சில் என்ற மன்னர் மாமன்றத்தில்
வழக்கு நடந்தது. இவர்கள் கோவிலுக்குள்
நுழையக் கூடாது என்றே அதிலும் தீர்ப்பு
வந்தது. இதன் பாதிப்பால் திருநெல்வேலியில்
3000 நாடார்கள் இஸ்லாத்தை தழுவினர்.

* திண்டுக்கலில் சிறுநீர் குடிக்க வைத்தது,
மலம் திண்ண வைத்தது போன்ற கொடுமை
யாலும் உண்மையான இறைவனை
தேடியும்தான் மதம் மாறுகிறார்கள்.
* பொருளாதாரத்திற்காகவோ,
பணத்திற்காகவோ, ஆசை காட்டியோ,
அச்சுறுத்தியோ மதம் மாறவில்லை.

முஸ்லிம்களாகிய நாம் என்ன செய்ய
வேண்டும்?

* எல்லாவிதமான பிரச்சனைக்கும்
குர்ஆனிலும், ஹதீஸ்லும் தீர்வுகள் இருக்கிறது.

* இப்போதுதான் இதுபோன்ற பிரச்சனை
களுக்கு சட்டத்தின் பெயரில் (மதமாற்ற
தடைச் சட்டம் வந்திருக்கிறது. இதற்கு முன்பு
பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த அரசாங்கத்
தாலும் அதிகார வர்க்கத்தினாலும் பல
பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கின்றது இஸ்லாம்.
(உதாரணம்)
*சூரத்துல் புருஜ் (நெருப்பு குண்டவாசிகள்)
*சூரத்துல் காஹப் (குகைவாசிகள்)
*மூஸா (அலை) காலத்தில்
ஃபிர்அவ்னுடைய தொந்தரவு
*இப்றாஹிம் (அலை) காலத்தில்
நம்ருத்துடைய தொந்தரவும் இதற்கும்
மேலாக இருந்தாலும் தாவா பணியை செய்து
கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்படியெல்லாம் கஷ்டப்படவேண்டியதில்லை. நாம் வாழும் இந்த
நாட்டில் தாவா செய்வது மிகவும் எளிது.ஆன்மிகத் தேடல் அதிகம் உள்ள நாடு இந்தியா.
தோண்டத் தோண்ட தங்கம் கிடைக்குதோஇல்லையோ சிலைகள் கிடைக்கும். பல
பாலியல் பிரச்சனைகள், பல கொலைகள்,கொள்ளைகள் சம்பந்தப்பட்ட நடவடிக்கை
கள் எடுத்த சாமியார்கள் இருந்தாலும்சாமியார்களின் எண்ணிக்கை குறையவில்லை.
சாதாரணமாக நம் நாட்டில் சில பொருட்களை வாங்கிச் சென்றாலும் தக்காளியாக
இருந்தாலும், கொத்தமல்லியாகஇருந்தாலும் பார்த்து பார்த்து வாங்கும் இந்த
நாட்டில் தன்னுடைய, தன்மானத்தையும்,தலையையும் சமர்ப்பிப்பது. ஓர் சிலையிடத்
திலா, ஓர் மிருகமிடத்திலா. இல்லை தன்னைபடைத்து, வளர்க்கின்ற இறைவனிடத்திலா
என்று புரிய வைத்தால் போதும். இதுபோன்றபிரச்சனைகள் வரும்போது இறைவனுடையதிருவசனம் ஞாபகத்திற்கு வரவேண்டும்.

" அல்லாஹூடைய மார்க்கத்தை வாயால் ஊதி
அணைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
அல்லாஹ் அவனுடைய ஜோதியை பரிபூரணம்
ஆக்கிவிடுவான். "
(அல்குர்ஆன்)


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு நாம் பிரிந்து விட வேண்டாம் நம் சமுதாயத்திற்கு தற்போது தேவையான உரை......

Friday, September 19, 2014

தொடரும் இஹ்வாண்களின் தியாக வரலாறு.

`` என்னை ஆயிரம் முறை தூக்கிலிட்டாலும் சரி சத்தியத்தை விட்டு ஒருபோதும் நான் பின்வாங்கமாட்டேன். ``


`` அல்லாஹ்வின் பாதையில் மரணமடைவதை எங்களின் இலச்சியங்களில் உயர்ந்த இலட்சியம் என்று நாங்கள் சொன்ன சமயங்கள் அதனை புரியாமல் - தெரியாமல் சொல்லவில்லை. அதன் வலிமையை நங்கறிந்தே சொன்னோம். ``

`` யா அல்லாஹ் எங்களை ஏற்றுக் கொள்வாயாஹ! யா அல்லாஹ் எங்களை ஏற்றுக் கொள்வாயாஹ!

ஈமானிய சுடரொளி வீசிடும் இச்சொற்களை சொன்னவர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழரோ அல்லது பல்லாயிரம் சஹாபாக்களை கொன்று குவித்த கொடுங்கோல் ஆட்சியாளர் ஹஜ்ஜாஜ் இப்னு யூசஃபை எதிர்த்து போராடி மரணத்தை ஆரத்தழுவிய மாமேதை சயீத் இப்னு ஜூபைர் (ரஹ்) அவர்களோ அல்ல.........

மாறாக நமது காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இஹ்வானுல் முஸ்லீமீன் இயக்கத்தின் தலைமை வழிகாட்டி டாக்டர் `` முஹம்மது பதீ `` அவர்கள் தாம் இவ்வார்த்தைகளுக்கு சொந்தக் காரர்.

கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி கெய்ரோ நீதிமன்றம் டாக்டர் முஹம்மது பதீ உட்பட 683 இஹ்வாண்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியது........

டாக்டர் பதீ அவர்களுக்கு தூக்கு தண்டனை என்றவுடன் வழக்கை நடத்திய வக்கீல்கள் அழுதார்கள்....
கோர்ட்டுக்குள் வந்திருந்த இஹவாண்கள் அழுதார்கள்.....
செய்தியை கேள்விபட்ட எகிப்து மக்கள் அழுதார்கள்......

ஆனால் மெய்யான இஸ்லாமிய ஆண்மகன் டாக்டர் முஹம்மது பதீ அவர்கள் அழவில்லை. கண் கலங்கவில்லை... கின்சிற்றும் பதட்டப் படவில்லை......

தூக்கு தண்டனையை கேள்விப்பட்டவுடன் டாக்டர் முஹம்மது பதீ சொன்ன வார்த்தை `` ஹஸ்புனல்லாஹூ வ நிஃமல் வகீல் `` தான்......


இதனை தொடர்ந்து கம்பீரமான குரலில் அவர் பேசிய வார்த்தைகள்தான் மேலே முதலில் உள்ள வார்த்தைகள்.......

இஸ்லாமும் - இஹவாண்களும்.


1924 ஆம் ஆண்டு கிலாஃபத் வீழ்த்தப்பட்ட சமயத்தில் உலகெங்கும் வாழ்ந்த பற்றுள்ள பாமர இஸ்லாமியர்களின் நிலைமை பரிதாபகரமாக ஆனது....

ஒரு பக்கம் இஸ்லாத்தை இழித்தும் பழித்தும் பேசிய முஸ்லிம் பெயர்களில் வாழ்ந்த நாத்திகர்களுக்கு மத்தியிலும்,

இன்னொரு பக்கம் இஸ்லாமிய எழுச்சியோ இஸ்லாமிய ஒற்றுமையோ ஏற்படாதவாறு உள்மார்க்க விவகாரங்களை கிளப்பி மக்களை திசைத் திருப்பிக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியிலும் பாமர ,உஸ்லிம்கள் சிக்கித் தவித்தார்கள் எனலாம்......

இவ்விரண்டு பிரிவினரும் சேர்ந்தும் தனித்தனியாக நின்றும் இஸ்லாத்தின் உண்மையான நோக்கத்தை அழித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார் அப்பொழுது வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் `` இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) ``.

இவர்களின் பிடியில் இருந்து முஸ்லிம்களை மீட்டெடுத்து இஸ்லாத்தின் உண்மையான ஆத்மாவை நோக்கி திரும்புவதற்கு 1928 ஆம் ஆண்டு எகிப்தில் அவர் ஒரு இயக்கத்தை ஆறம்பித்தார்......அதுவே `` இஹ்வானுல் முஸ்லீமின் `` எனும் மாபெரும் இயக்கம்....

சோர்ந்து போய் கிடந்த இஸ்லாமிய எழுச்சி எனும் இலட்சியம் இஹ்வாண்களால் மீண்டும் ஒளிவீச ஆறம்பித்தது.........

இஸ்லாத்தை இலட்சியமாக கொண்ட இஸ்லாமிய இலட்சிய வாதிகள் உருவானார்கள்.....

நாத்திகத்தின் பிடியில் இருந்தும், உள்மார்க்க கொள்கையாளர்களின் பிடியிலிருந்தும் எகிப்து மக்களும், எகிப்தை தொடர்ந்து உலகம் முழுவதும் வாழ்ந்த மக்களும் விடுபட தொடங்கினார்கள்...........

இஸ்லாத்தை தீர்வாக சொன்னதற்காகவும், உள்மார்க்க விவகாரங்களை விட்டும் உண்மையான இஸ்லாமிய எழுச்சியை நோக்கி மக்களை திருப்பியதற்காகவும் நவீன உலகில் அதிகம் தண்டிக்கப்பட்டவர்கள் இஹ்வாங்கள் என்றால் மிகையில்லை...

ஆம்..ஒரே சமயத்தில் இரண்டு பிரிவினருக்கும் இஹ்வாண்கள் வேண்டாதவர்களானார்கள்......

இஸ்லாத்தை தீர்வாக சொன்னதற்காக கம்யூனிச இரஷ்யாவும், இஸ்ரேலும், அமேரிக்காவும், மேற்குலகமும் இஹ்வாண்களை வீழ்த்த துடித்தன......

உள்மார்க்க விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தராததாலும் - அவைகளை எதிர்த்ததாலும் உள்மார்க்க விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தருபவர்களை உலெகெங்கும் உதவி செய்து ஊக்கப்படுத்தும் சவுதி அரேபியாவும் இஹ்வாண்களை வீழ்த்த துடித்தன........

(கடந்த 2013 ஜூலை 3 - ம்தேதி எகிப்தில் டாடர் முர்சி ஆட்சியை கவிழ்த்தியது முதல் இப்போது வரை அமெரிக்கா, இரஷ்யா, இஸ்ரேலுடன் இணைந்து சவுதி அரேபியாவும் எகிப்து இராணுவத்துக்கு பண உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது)

விளைவு இஹ்வாண்களை வீழ்த்திட பல வியூகங்களை எதிரிகளால் வகுக்கப்பட்டன....

கொள்கை ரீதியாக மக்களுக்கு மத்தியில் அவர்களை பலவீனபடுத்திட பல இயக்கங்கள் உருவாக்கப்பட்டன.....

உலகவரலாற்றில் அதிகம் துன்புருத்தல்களுக்கும், சித்ரவாதைகளுக்கும் ஆளானவர்கள் நிட்சயமாக இஹ்வாண்களாகதான் இருப்பார்கள்.......

இஹ்வாண்களின் தூக்கு தண்டனை வரலாறு.

இஹ்வாண் இயக்கத்தின் தலைவர் இமாம் ஹசனுல் பன்னாஹ் (ரஹ்) 1949 - ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டது முதல் இப்போது வரை இஹ்வாண்கள் இயக்கம் ஏராளமானவர்களை இழந்துள்ளன..........

`` ஹமாசுக்கு இடம் தந்தார்கள் `` என்று கூறி ஆட்சி கலைக்கப்பட்டு
529 பேருக்கு தூக்குத் தண்டனை.
683 பேருக்கு தூக்குத் தண்டனை.
37  பேருக்கு தூக்குத் தண்டனை.

என்று இராணுவ கைக்கூலி நீதிமன்றங்களில் இஹ்வாண்களுக்கு தீர்ப்பளிக்கட்டுவருகிறது...

இன்று நேற்று அல்ல....

ஜமால் அப்துன் நாசர் ஆட்சி காலத்திலிருந்து இஹ்வாண்கள் தூக்குத் தண்டனை அளிக்கப் பட்டு வருகின்றனர்....

1954 - ஆம் ஆண்டு நாசரை கொல்ல முயன்றார்கள் என்று ஏழு இஹ்வாண் தலைவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.....

இஹ்வாண்கள் இயக்கத்தின் தலைமை வழிகாட்டி பேராசிரியர் ஹசன் குதைபி, மஹ்மூதப்துல் லதீஃப், யூசஃப் தலஅத், இப்ராஹிம் தய்யிப், ஹந்தாவி, முஹம்மது ஃபரக்லி, அப்துல் காதிர் அவதா ஆகியோரில் ஹசன் குதைப்புக்கு மட்டும் உடல் நிலயை கவனத்தில் கொண்டு தண்டனை குறைக்கப்பட்டது......

இதனை தொடர்ந்து 1965 - ல் இந்த ஒயக்கம் மீண்டும் தூக்கு தண்டனையை சந்தித்தது.....இயக்கத்தின் முக்கியமான எழுச்சியாளர்கள் கடும் சித்ரவாதைகளுக்கு உள்ளாக்கபட்டு தூக்கிலிடப்பட்டனர்.....

அச்சமயத்தில் இஹ்வாண்கள் நாங்கு பிரிவாக பிரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.....

தூக்கிலிடப்பட்ட முதல் பிரிவில் ஏழு நபர்கள் இருந்தார்கள்...

மறைந்த மாமேதை ஷஹீத் செய்யிது குதுப் அவர்களில் முக்கியமானவர்.......

இதனை தொடர்ந்து அன்வர் சதாத்துக்கு பின் ஆட்சியை பிடித்த முபாரக் அவரின் ஆட்சியை காவல்துறை ஆட்சி என்றுதான் அனைவரும் அழைத்தனர்..........

முபாரக்கின் காவல்துறை கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனங்கள் ஏராளம்.....

முபாரக்கின் ஆட்சிகாலத்தில் 90 இஹ்வாண்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 68 பேருக்கு அது நிறைவேற்றப்பட்டது.....

ஆக மரணங்களும் சித்ரவாதைகளும் இஹ்வாண்களுக்கு பழகிப்போன ஒன்று......
அவற்றை சொர்கத்தின் வாயிலாகதான் அவர்கள் காண்கிறார்களே தவிர அவற்றய் கண்டு அவர்கள் நடுங்கியதில்லை.......

ஆதலால்தான் மரன தண்டனை விதிக்கப் பட்ட பிறகு அவர்கள் `` புன்முறுவல் பூக்கும் காட்சிகளை பத்திரிக்கைகளில் இணையதளங்களில் அதிகம் காணமுடிகின்றது..........

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் அல்லாஹ்வின் பாதைகளில் போரிட்டுக் கொல்லப்படவேண்டும்....மீண்டும் உயிர் தரவேண்டும்.... மீண்டும் போரிட்டுக் கொல்லப்படவேண்டும்......இதனை நான் விரும்புகிறேன்........( புஹாரி )

நபித் தோழர் குபைப் (ரலி) அவர்களுக்கு மக்கா இனைவைப்பாளர்கள் மரண தண்டனை தந்த சமயத்தில் அவர் சிரிதும் நிலை குலையாமல் இருந்ததாக வரலாற்றில் நாம் காண்கிறோம்......

உண்மையில் சத்தியத்திற்காக வாழ்வதும் சத்தியத்திற்காக மரணிப்பதும் முஃமிண்களுக்கு அல்லாஹ் தரும் பாக்கியங்களில் அளப்பெரும் பாக்கியமாகும்......

நாம் வாழும் இக்காலத்தில் அதற்கு உயிருள்ள சாட்சியமாக வாழ்பவர்கள் இஹ்வாண்களே.......

மரண தண்டனை விதிக்கப்படும் நீதிமன்றங்களில் இஹ்வாண்கள் பேசும் பேச்சுகள் நம்மை வியக்க வைக்கின்றன.....

அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாவதில் அவர்கள் கொண்டுள்ள ஆசை நம்மை மெய் சிலிர்க்கவைக்கின்றன.............

இத்தனைக்கும் அவர்கள் யாரும் படிக்காதவர்களோ அல்லது தொழில் ஏதும் அற்றவர்களோ அல்ல.......

மாறாக அவர்கள் அத்தனை பேரும் படித்தவர்கள்......

டாக்டர்கள், பொறியியாளர்கள், கல்லூரி - பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் என அவர்களில் உள்ளவர்கள் அனைவரும் படித்த மேதாவிகள்........

1232 டாக்டர்கள்
2574 பொறியிளாளர்கள்
124 பல்கலைக் கழக பேராசிரியர்கள்
5342 அல் அஸ்ஹர் அறிஞர்கள்
3874 மாணவர்கள்
என்று படித்த இஹ்வாண்கள் சிறையியடைக்கப்பட்டுள்ளதாக அல் ஜஸீரா மிடில் ஈஸ்ட் மாணிட்டர் பத்திரிக்கை சொல்கிறது............

இவர்கள் நினைத்திருந்தால் அவர்கள் கற்ற கல்வியைக் கொண்டு ஏதேனும் ஒரு வேலையை நிறந்தரமாக அமைத்துக் கொண்டு அதில் சொகுசாக வாழ்க்கையை கழித்திருக்கலாம்.....

அவ்வாறு செய்திருந்தால் சித்ரவாதைகளும் கொடுமைகளும் அவர்களை அடைந்திருக்காது.....

ஆனால் அதற்காக பிறக்கவில்லை அவர்கள்.....

இறைவன் அதற்காக அவர்களை படைக்கவில்லை......

என்பதை அவர்கள் நங்கு உணந்துக் கொண்டார்கள் போல..........

டாக்டர் முஹம்மது பதீ

இஹ்வாண்கள் இயக்கத்தின் தற்போதைய தலைமை வழிகாட்டியான இவர் தமது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளை சிறையில் கழித்தவர்...

கடந்த ஏப்ரல் 28 ந்தேதி கெய்ரோ நீதிமன்றத்தில் நடந்த எட்டு நிமிட விசாரணையில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட இவர். ஒரு கால்நடை மருத்துவர்.

1943-ம் ஆண்டு பிறந்த பதீ ஐ பொருத்தவரை அவர் இமாம் ஹசனுல் பன்னாஹ்வை சிறு வயதில் கேள்விப்பட்டிருந்தார்...அவ்வளவுதான்...அதற்கு இஹ்வாண்கள் இயக்கத்தில் அவருக்கு அவ்வளவு தொடற்பு இல்லை...

பதீ அவர்களுக்கு இஹ்வாண்கள் இயக்கம் சிரியாவில் வைத்துதான் அறிமுகமானது.... சிரியாவின் தலைசிறந்த மார்க்க அறிஞரான டாக்டர் முஹம்மது சுலைமான் நஜ்ஜாரி அவர்கள்தான் இஹ்வாண்கள் இயக்கத்தை அவருக்கு அறிமுகம் செய்தவர்.......

நஜ்ஜாரி பதீ ஐ குர் ஆனின் கடைசி பகுதியை மனனம் செய்ய சொன்னார்....அதனை மனனம் செய்தார் டாக்டர் பதீ....பின்பு நஜ்ஜாரி ஷஹீத் செய்யது குதுப் எழுதிய தப்சீர் இன் 30 - ம் பகுதியை தந்தார்கள்....

அதனை படிக்க படிக்க உண்மையான வாழக்கை தன்னூல் ஊடுறுவதை உணர்ந்தார் பதீ....திருக் குர் ஆனின் உண்மையான சுவையை அப்போதுதான் உண்ர்ந்தார் அவர்......

அதற்கு மேல் சிறிதும் தாமதிக்காமல் இயக்கத்தில் இனைந்தார் பதீ....ஷஹீத் சய்யிது குதுப் இன் பாசத்தற்குறிய தோழர்களில் ஒருவரானார்....

இஹ்வாண்கள் இயக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய பதீ.....கடந்த 2013 ம் ஆண்டு ஜூலை மாதம் இஹ்வாண்கள் இயக்கத்தின் தலைமை வழிகாட்டியாக பொறுப்பேற்றார்..... மறுமாதமே கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்......

#சிறைச்சாலைகளில் பதீ#

1965 ம் ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்பை முடித்தர் பதீ...அது நாசரின் கொடுங்கோண்மைகள் அரங்கேறிய காலம்... செய்யுது குத்துப் மற்றும் இஹ்வாண் இயக்கத்தின் தலைவர்கள் நாசரினால் வேட்டையாடப்பட்டனர்.....அச்சமயத்தில் செய்யுது குதுப் உடன் பதீ யும் கைது செய்யப்பட்டார்.....அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது....

நாசரின் ஆட்சிக்கு பின் அன்வர் சதாத் ஆட்சிக்கு வந்தார்.... அவர் இஹ்வாண்களை விடுதலை செய்தார்.... அப்போது டாக்டர் பதீயும் விடுதலை செய்யப்பட்டார்......

விடுதலை செய்யப்பட்டவுடன் வீட்டுக்கு செல்லாமல் நேராக இஹ்வாண்கள் அலுவலகத்திற்கு மீண்டும் பழைய துடிப்புடன் இஸ்லாமிய எழுச்சிக்காக உழைத்தார்.....

1998 ம் ஆண்டு தாவா பணியில் ஈடுபட்டார் என்பதற்காக 75 நாட்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது..... பின் 75 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார்.....

மீண்டும் 1999 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார் பதீ...அப்போது அவருக்கு ஐந்து ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது......தண்டனை காலத்தை சிறையில் கழித்த பின்பு சிறையில் இருந்து வேளீயே வந்த அவர் முர்சி ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்பு 2013 - ம் ஆண்டு ஆகஸ்டு 20 ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படூள்ளார்.....

பதீயை பொருத்தவரை அவர் தமது வாழ்வில் மூன்றில் இரண்டு பகுதிகளை சிறைகளில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....

#நீதிமன்றங்களில் பதீ#

பல்வேறு பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பதீ.பல்வேறு வழக்குகளுக்கு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்.......

வழக்கை நடத்தும் வக்கீல்களுக்கு கூட பேச அனுமதி தரப்படாத மீதிமன்றங்களில் தைரியமாக அவர் பேசும் பேச்சுகள் ஈமானியை எழுச்சியைத் தரவல்லது

கடந்த மே 11 ந்தேதி விசாரனை நீதிமன்றத்தில் வைத்து பதீ இப்படி பேசினார் :

`` ராஃபியா அதவிய்யா நிகழ்வு அது ஓர் புரட்சி.
அது ஒரு ஜிஹாத்.
அது மார்கத்துக்கு செய்யப்ப்ட்ட உதவி.
அது ஷஹதாத்தை தந்த மாபெரும் அமல்..

எகிப்து மக்களை யாரும் அடிமைப்படுத்தமுடியாது.
அவர்களை நிரந்தரமாக இழிவுபடுத்திட முடியாது.

எங்களின் தாய்மார்கள் எங்களை சுதந்திரமானவர்களாக
பெற்ற நிலையில் சுதந்திரத்துக்கு நாங்கள் நிறைய
அற்பணிப்பு செய்யவேண்டியுள்ளது....

எகிப்து உயிர் பெருவதற்கு எங்கள் உயிர்களை
அல்லாஹ்வின் பாதையில் தயங்காமல்
தருவோம்....அல்லாஹூ அக்பர்..

நிட்சயம் இந்த புரட்சி நீடிக்கும். உயிர்களை அல்லாஹ்தான் கைப்பற்றுகிறான்.
அவன் நாடிய நேரத்தில் உயிர்கள் கைப்பற்றப்படுகின்றன...

அல்லாஹ் கூறுகிறான் : ஆதமாக்களை அவை மரணமடையும்
நேரத்தில் அல்லாஹ்வே கைப்பற்றுகிறான்..(39:42)

மக்களுக்காவும் மார்கத்திற்காகவும் சுதந்திரத்துக்காகவும் தான்
எங்களின் இரத்தங்கள் சிந்தப் படுகின்றன....

எங்களூக்கும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதிகாரர்களுக்கும்
மத்தியில் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.
அல்லாஹ்வின் உதவி நிட்சயம் எங்களுக்கு கிடைக்கும்.
அதில் நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம்... ``

ஆதாரம் : Almisriyoon May 11 2014

#மகனை கனவில் கண்ட பதீ#

டாக்டர் முஹம்மது பதீ அவர்களின் ஒரே ஆண் மகன் அம்மார் அவர்கள் கடந்த 2013 ஆகஸ்டு மாதம் கெய்ரோவில் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்......

ஆனால் பதீயின் மகன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களூக்கு முன்பு பதீ ஒரு கனவு கண்டார்....

அந்த கனவில் பதீயின் மகன் வந்து `` தந்தையே உங்களுக்கு முன்பு நான் சுவனம் செல்லப் போகிறேன் `` என்று கூறினாராம்...
(அல்லாஹூ அக்பர்)

கடந்த ஏப்ரல் 28 ந்தேதி பதீக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.....அப்போதும் தன் மகனை கனவில் கண்டிருக்கிறார் பதீ......

கனவில் அவரின் மகன் அம்மார் இப்படி கூறீனாராம் :

`` தந்தையே சுவனத்தில் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ``

இச்செய்திகளை சிறையில் தம்முடன் அடைக்கப்பட்டுள்ள இஹ்வாண்களின் தலைவர்களுள் உருவரான முஹம்மது ஜக்கரியாவின் மனைவியிடம் கூறினார்  பதீ....

அதாரம் : Ansaar port sayidh May – 10 2014

டாக்டர் முஹம்மது முர்சி

இஹ்வாண்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த போது முதலில் முர்சி அவர்கள் வேட்பாளராக அறிவிக்கபடவில்லை.
சில சந்தர்ப்ப சூழ் நிலையில்  தான் முர்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

எனினும் அவரை அல்லாஹ் தேர்தெடுத்துள்ளான் போல அவரிப் இஸ்லாமிய இஸ்லாமிய பற்றும், அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையும், சொர்கத்தின் மீதான ஆசையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.....

கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது அவரை கைது செய்து இரகசிய சிறையில் அடைத்தது இராணுவம்...
பின்பு பலத்த யோசனைக்கு பின் நீதி மன்றங்களில் அவரை ஆஜர் படுத்தியது எகிப்து இராணுவம்.

#நீதிமன்றங்களில் முர்சி#

நீதிமன்றங்களில் நீதிபதிகளைப் பார்த்து இப்படி சொன்னார் முர்சி :

`` நாளை மறுமை நாளில் நீங்கள் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்.
நான் இருக்கும் இடத்தில் நீங்கள் இருப்பீர்கள்... அல்லாஹ்விடம் உங்களை
விடமாட்டேன். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்... ``

முர்சியின் இப்பேச்சினால் நீதிபதிகள் ஒரு கனம் திகைத்து போனார்கள். நீதிபதிகளில் சிலர் பதவிகளை இராஜினாமா செய்தார்கள்.....

முர்சியின் வார்த்திகள் இஹ்வாண்களுக்கு பெரும் எழுச்சியை தந்தன. முர்சி பேசினால் இன்னும் போராட்டம் அதிகாமகும் என்று சுதாரித்துக் கொண்ட எகிப்து இராணுவம் தொடர்ந்து முர்சியை நீதிமன்றத்தில் ஆஜராக விடாமல் வழக்கை இழுத்தடித்து வந்ததது....

பல்வேறு ஒத்திவைப்புகளுக்கு பிறகு முர்சி மீதான வழக்கு விசாரணை 15.04.2014 செவ்வாய் கிழமை நடந்தது.

அப்போது நீதிமன்றத்தில் முர்சி இப்படி பேசினார் :

`` எகிப்து இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு சட்ட விரோதமாகும்.
இதனி ஏற்க்க இயலாது. மக்கள் சட்டத்திற்காக போராடிவருகின்றனர்.
எகிப்து மக்களுக்கு கூறுகிறேன். நீங்கள் போராடுங்கள் நிட்சயம் 
இராணுவ ஆட்சி முடிவுக்கு வரும். ``

ஆதாரம் : Almisriyoon May 15 2014