Thursday, July 10, 2014

ஹிந்து - முஸ்லிம் கலவரங்கள் தொடர் - 1


ஒருவர் இதை ஒற்றுக் கொள்ளவில்லையென்றாலும் நாட்டின் மதரீதியான பார்வையின் அடிப்படையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பொதுவாக தேசப் பற்றுடன் இருப்பதில்லை.....

அவர்கள் பாகிஸ்தானுக்கு சாதகமானவர்கள், அவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளிடம் கருணை கொண்டவர்கள் என்றுதான்  பார்கிறார்கள் பிராமினர்கள்....

இந்தஸ் காரணங்களுக்காகவே இந்த நாட்டிலுள்ள தேசியவாத தேசப் பற்றுள்ள பிராமினர்கள் முஸ்லிம்களை தீவிரமாக எதிர்கிறார்கள்.....

நியாயமான இந்து மக்களை முஸ்லிம்களுக்கெதிராக தட்டி எழுப்புகிறார்கள்....

இதை அவர்கள் செய்ய காரணம் கடந்த 700 ஆண்டுகளாக முஸ்லிம் மன்னர்களிடம் அடிமைப்பட்டிருந்த போது இந்துக்களை அவர்கள் செய்த கொடுமை.....

இந்த விடயங்களைப் பற்றியும் அவற்றில் உள்ள உண்மைகளை பற்றியும் பார்ப்பதற்கு முன்னால் இந்த நாட்டிர்கும் இந்து மதத்திற்கும் பாதுகாவலர்களாக தங்களை தாங்களே காட்டிக் கொள்ளும் இந்த பிராமனியர்கள் யர் என்பதை பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ளவேண்டும்.....

இந்த பிராமனிஸ்ட்டுகள் பிராமினர்களில் ஒரு சிறிய பகுதியினர்.... ஒரு குரிப்பிட்ட நம்பிக்கை கொண்ட பிராமனர் அல்லாதோரை பொருத்தவரி இவர்கள் நுன்னோக்கியை வைத்து ஒப்பு நோக்கக் கூடிய அளவில் உள்ளவர்கள்.....இவர்கள் தங்களின் நம்பிக்கையால் பிறப்பின் அடிப்படையில் தங்களை உயர்ந்த சாதியினராகவும் , தெய்வீகமானவர்களாக கருதுபவர்கள்....

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவர்களிடம் ஒரு குருட்டு எண்ணம் இருக்கிறது அது `` நாங்கள்தான் தலைமுறை, தலைமுறையாக இந்தியாவை ஆளப் பிறந்தவர்கள் `` என்பதுதான்...

இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் வரலாற்றில் எப்போதும் முஸ்லிம்களோடு ஒற்றுமையாக வாழவேயில்லையா?

பிராமணர்களும் முஸ்லிம்களும் எதிரியானது எப்போது?

இந்த கேல்விகளுக்கு வரலாறு என்ன சொல்கிறது என்றால், 1893க்கு முன் முஸ்லிம்களும், பிராமணர்களும், சகோதரர்களாகவே இருந்திருக்கின்றனர்.....

ஆனால் 1893க்கு பின் இந்த நிலை மாறுகிறது..  இதுதான் வகுப்புவாத இந்தியாவின் குறியீடு.... இதை நாம் மத்திய கால் அல்லது இடைக்கால வரலாற்றின் பின்னனியில் அலசுவோம்.....

இந்தியாவை 700 வருடங்களாக முஸ்லிம்கள் ஆட்சி செய்தார்கள் என்பது வரலாற்று உண்மை.... இதை யாரும் மறுக்க இயலாது...

இந்திய சமூகத்தின் மீதும் இந்த பிராமனியர்களின் தாக்கம் மேலோங்கி இருந்தது என்பதும் உண்மை....

இக்கால கட்டத்தில் சாமானிய இந்துக்கள் இவர்களால் ஒடுக்கப்பட்டு, பிராமனியர்கள் இவர்களை தாம் நினைத்தபடியெல்லாம்  ஆட்டுவித்தனர்.......

இப்படிப்பட்ட பிராமினர்கள் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி காலத்தில் முஸ்லிம் மன்னர்களுக்கு எதிரானவர்களாக இருந்திருந்தால் இஸ்லாமிய மன்னர்களை ஒரு வருடம் கூட ஆட்சி செய்ய விட்டிருக்கமாட்டார்கள்....

ஆனால் மத்திய வரலாற்று காலத்தில் ஹிந்துக்களை முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக தட்டி எழுப்பும் ஒரு முன் உதாரணத்தை கூட காணக் கிடைக்கவில்லை....

அல்லது

முஸ்லிம் ஆசியாளர்களுக்கு எதிராக எந்த ஒரு இயக்கத்தையும் நடத்தியதர்கான ஆதாரத்தையும் காணக் கிடைக்கவில்லை.........

அதற்கு பதிலாக முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியை சுமூகமாக நடத்த அவர்கள் ஆட்சி விவகாரங்களில் ஆலோசனைகளை பிராமனர்கள் வழங்கி வந்த காட்சி வரலாற்றில் காணக் கிடைக்கிறது.....

முகலாய பேரரசர்களில் அக்பரின் அரசில் அதிகமானவர்கள் பிராமனர்களாகவே இருந்தனர்....

மாவீரன் திப்பு சுல்த்தான் அவர்களின் முக்கியமான ஆலோசகர் மற்றும் நிர்வாகிகள் பிராமனர்கள்தான்......

இவ்வளவு ஏன் இன்றைய காலத்தில் அதிகமாக குற்றம் சாட்டப்படும் , இந்துக்களை அதிகமாக கொடுமைப் படுத்தியதாக சொல்லப்படுகின்ற ஔரங்கஜேபின் தர்பாரில் 50% பிராமனர்கள்தான்....

உண்மை என்னவெனில் பிராமனர்களின் ஒத்துழைப்போடுதான் முஸ்லிம்கள் இந்தியாவை 700 ஆண்டுகாலம் எவ்வித பிரச்சனையுமின்றி ஆள முடிந்தது... இதனால் தான் அக்பர்,  ஔரங்கஜேப் போன்றோர் தங்களின் ஆட்சி காலத்தை 50 வருடத்திற்கு நீட்டிக்க முடிந்தது.......

மொத்தத்தில் மத்திய கால வரலாற்றில் முஸ்லிம்களுடன் பிராமனர்களின் உறவு சுமூகமாகவே இருந்தது....  என்பது தெளிவு.....

இந்த பிண்ணனியோடு உற்று நோக்கும்போது.....

`` ஆர்.எஸ்.எஸ். - ன் முன்னால் தலைவர்  கோல்வாக்கர், `` We and our Nationhood Defined `` என்ற நூலில் கூரியுள்ள `` என்றைக்கு முஸ்லிம்கள் இந்த தேசத்திற்குள் நுழந்தார்களோ அன்றிலிருந்து இவர்களுக்கு எதிராக இந்து தேசம் போராடிக் கொண்டிருக்கிறது.......``     என்ற செய்தி கடைந்தெடுத்த பொய் என்றாகிறது.....``

இல்லை இது உண்மை என்று நீங்கள் கூருவீர்களானால் `` நீங்கள் இந்து தேசம் எனும் வட்ட வரையை விட்டு பிராமனர்களை வெளியேற்றுங்கள் `` ஏனெனில் `` 1893 க்கு முன் வரை முஸ்லிம்களும், பிராமனர்களும் சகோதரர்களாகவே வாழ்திருக்கிறார்கள்...

பிராமன பேஷ்வாக்களின் ஆட்சியின் போது புணேயில் முஸ்லிம்களின் ஆட்சி 30% ஆக இருந்துபோதும் அங்கே இந்து - முஸ்லிம் தகராறு எதையும் வரலாற்றில் காணமுடியவில்லை....

இவையனைத்திற்கும் மேலாக 1857 - ல் பொதுவான ஹிந்துக்களும், பிராமணர்களும், முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து முகலாய பேரரசர் பகதூர் ஷா ஆட்சியை மீண்டும் கொண்டுவர் போராடி இருக்கிறார்கள்.....

இந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் பார்த்தால் 19 வது நூற்றாண்டின் பாதிவரை முஸ்லிம்களுக்கும் பிராமனிஸ்டுகளுக்கும்  இடையிலான உறவு சீராகவே இருந்திருக்கிறது.....

அப்படியெனில் ஏன் பிராமனிஸ்ட்டுகள் 19ம் நூற்றாண்டின் இருதியில் முஸ்லிம்களுக்கு எதிறாக மாறினார்கள்?

ஏன் தொடர்ச்சியான கலவரங்களை கட்டவிழ்த்து அதன் மூலம் தேச பிரிவினைக்கு வித்துட்டு அதை இன்று வரை தொடர செய்கிறார்கள்?


இதற்கான பதில்களை  அடுத்த பதிவில் பார்ப்போம்......

No comments:

Post a Comment