Thursday, July 10, 2014

ஹிஜாப் - ஒரு பார்வை.


மேற்கத்திய நாடுகளை சார்ந்த இஸ்லாமிய எதிரிகளும் சரி,
இந்தியாவை சேர்ந்த இஸ்லாமிய எதிரிகளும் சரி, இஸ்லாமிய பெண்கள் `` ஹிஜாப் `` அனிவதை கடுமையாக விமர்சிப்பவராகவும், எதிர்ப்பவராகவுமே உள்ளனர்...

இஸ்லாமிய பெண்கள் ஒழுக்கத்துடன் இருப்பது இவர்களின் கண்களுக்கு பொறுக்கவில்லை போல அதான் நமது இஸ்லாமிய பெண்களை எப்படியாவது அரைகுறை ஆடை அணிவித்து பார்த்துவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள்.....

என்ன செய்வது இது இறைவனின் கட்டளையாயிற்றே! இதை எதிர்க்க எதிர்க்க அது இன்னும் வளர்ந்துகொண்டுதான் போகிறது.......

சரி இப்போது விடயத்திற்கு வருவோம்.


ஹிஜாப் என்றால் என்ன?

ஆண்களின் இச்சையை தூண்டாத வகையில் பெண்கள் அணியக்கூடிய ஒரு கண்ணியமான உடையையே இஸ்லாம் ஹிஜாப் என்கிறது....

அந்த ஹிஜாப் பின்வரும் ஏழு கண்டிஷங்களின் அடிப்படையில் இருக்கவேண்டும்.....

1.  முகத்தையும் கைகளையும் தவிர உடம்பின் ஏனைய பாகங்கள் எல்லாவற்றையும் மறைப்பது.

2.  உடல் உறுப்புக்களைப் பார்க்கக் கூடிய அளவில் அந்த ஆடைகள் மெல்லியதாக இருக்கக் கூடாது.

3. ஆடைகள் மிகவும் இறுக்கமின்றி நெகிழ்வானதாக இருக்க வேண்டும்.

4.  ஆண்களின் ஆடைகளின் பிரதிபலிப்பைப் போல பெண்களின் ஆடை இருக்கக் கூடாது.

5. மற்ற சமூகப் பெண்களின் உடைகள் போல இருக்கக் கூடாது.

6.வாசனை திரவியங்கள் தடவிய ஆடையாக இருக்கக் கூடாது.

7. நமது செல்வச் செழிப்பை எடுத்து காண்பிப்பது போன்ற, அதாவது காட்சிப் பொருளாக ஆடம்பரமான ஆடைகளை பர்தாவாக அணியக் கூடாது.

இந்த ஏழு விதிகளை உள்ளடக்கிய ஒரு உடைதான் ஹிஜாப்.

பெண்கள் பர்தா அணிவதைப் பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் பல இடங்களில் கூறியிருக்கிறான்.

"நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும் அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்".
(அல்குர்ஆன்-33:59)
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப்பை அணிவதால் சுதந்திரமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று இஸ்லாத்தின் எதிரிகளும் சில பெண்கள் அமைப்புகளும் கூறிவருகின்றன...

ஆனால் உண்மையென்னவென்றால் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப்பை அணிவதால்தான் சுதந்திரமாக இருக்கிறார்கள்.
இதைத்தான் இறைவன் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான்.

மேலும் இஸ்லாமிய பெண்கள் எத்தகைய பண்புகளுடன் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் இறைவன் தன் திருமறையில் மிகத்தெளிவாக கூருகின்றான்.

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: "தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ¤வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள்.
(
அல்குர்ஆன் 24:31)
மேலே உள்ள வசனத்தை அனைத்து பெண்களும் அப்படியே பின்பற்றினால் பெண்களுக்கு எதிறாக நடைபெறும் பாதி பிரச்சனைகளை குறைத்து விடலாம்.

ஹிஜாப் அணியாததால் ஏற்படும் விபரீதங்கள்:-

ஒரு பெண்ணுக்கு இயல்பாகவே அமைந்துள்ள அச்சம், மடம், நாணம், பயர்ப்பு, அடக்கம் போன்ற பண்புகளுக்கு ஏற்ற விதமாகவே ஹிஜாபும் அமைந்துள்ளது. எந்த ஒரு பெண்ணையும் கண்கள் கண்ட பிறகு தான் மனம் அவள் பேரில் நாட்டம் கொள்கிறது. ஹிஜாப் அணிவதினால் கண்களுக்கு திரையிட்டாற் போலிருக்கும் தகாத எண்ணங்கள் தோன்றாது. எத்தகைய கட்டுப்பாடும் இல்லாத மற்ற சமூகப் பெண்கள் ஏன் ஹிஜாப் அணியாத நம் இஸ்லாமியப் பெண்களும் பொது இடங்களிலும், அலுவலகங்கள், கல்லூரி பாடசாலை போக்குவரத்து போன்றவற்றிலும் அனுபவிக்கும் துன்பங்கள் தொந்தரவுகள் ஏராளம். நாம் தினந்தோறும் நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக எவ்வளவோ விஷயங்களை அறிந்து கொண்டுதானிருக்கிறோம்.
சில வருடங்களுக்கு முன்பு ஷரீகா ஷா என்கிற கல்லூரி மாணவியை ஆட்டோவில் சென்ற ரவுடிகள் அவளை பிடித்து இழுத்து ஆட்டோவின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அப்பெண் தெருவில் இழுபட்டு மரணித்ததை அவ்வளவு விரைவில் யாரும் மறந்திருக்க முடியாது. சரிவர உடலை மறைத்து உடை உடுத்தாததினால் தான் பெண்களுக்கு இப்படியான சம்பவங்கள் நேருகிறது என்று காவல் அதிகாரிகளால் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பெண்கள் உடையணிவதே ஆண்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று பெங்களூர் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கூறுகிறது. பல்வேறு மாநிலங்களில் பெண்கள் அணியும் ஆடைக்குறித்து வங்க தேசம் உட்பட நமது நாட்டில் 125 கல்லூரிகளில் 20000 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணிவது நம் நாட்டில் பெருகிவரும் குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது. இது ஆண்களையும் குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று 75 சதவீத மாணவர்கள் கூறினார்கள் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
(
ஆதாரம் - தினமலர் ஜூன் 2-ம் தேதி 2001-ம் ஆண்டு)
தமிழகத்தில் ஒன்பது மாதகாலங்களில் மட்டும் கற்பழிப்பு-445 வழக்குகளும், பாலியல் பலாத்காரம்-1614 வழக்குகளும், பெண்களை கடத்தியதாக-224 வழக்குகளும், ஆபாசமாய் பேசியதாக-2422 வழக்குகளும், வரதட்சணை கொடுமை-904 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என இந்த தகவலை சமூகநலத்துறை அமைச்சர் .வளர்மதி சட்டபேரவையில் தெரிவித்தார்.
(
ஆதாரம் - தினமணி நவம்பர் 11-ம் தேதி 2001-ம் ஆண்டு
)

இத்தகைய பிரச்சனைகளிலிருந்து பெணகளை பதுகாக்கவே ஹிஜாப் எனும் கண்ணியமான உடையை இஸ்லாம் பெண்களுக்கு கடமையாக்கியுள்ளது...

`` சரி ஹிஜாப் அணிந்தால் மட்டும் இந்த பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்களும் இத்தகைய பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளனரே? `` என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது....

நான் என்ன சொல்கிறேன் என்றால் ஹிஜாப் அணிந்துகொண்டு போகும்போதே இந்த நிலை என்றால் உங்கள் கூற்றுப்படி திறந்துபோட்டுகொண்டு சென்றால் என்னவாகும் என்பதை சிந்தித்து பாருங்கள்...........

ஒரு ஆண் ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றிவந்துவிடலாம் ஆனால் ஒரு பெண் இவ்வாரு செய்ய முடியாது அப்படி செய்ய யாரும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்..... எனவே ஒரு பெண்ணின் உடல் மறைக்கப்பட வேண்டியது என்பதை ஒவ்வொரு மனிதனின் உள்ளங்களும் ஒற்றுக்கொள்கின்றன. ஆனால் அது எந்த அளவுக்கு என்பதில்தான் இஸ்லாமும் பிற சமூகமும் மோதுகிறது.
ஆணின் மனோ இச்சைகளை தூண்டாத வகையில் தன் உடலை மறைத்து ஒரு பெண் தன் உடையை அமைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்???????

இதனால் அப்பெண்ணிற்கு சுதந்திரமும், பாதுகாப்பும், கண்ணியமும், உயர்வும் கிடைக்கிறது அல்லவா?


சிந்தித்து பாருங்கள்.......

No comments:

Post a Comment