Thursday, July 10, 2014

கேள்வி என்றால் என்ன?

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. என்றார் வள்ளுவர்.....

கேள்விகள் படையெடுத்தால் மூடனம்பிக்கைகள் மூட்டைமுடிச்சிகளுடன் ஓட்டம் பிடிக்கும்... என்றான் ஒர் அறின்.....

கேள்விக் கேட்டு ஒரு விஷயத்தை அறிந்துக் கொள்ள வெட்கப் படுபவன் ஒருபோதும் தனது அறிவை வளர்த்துக் கொள்ளமாட்டான்........ என்பார் அறிஞர் முஜாஹித்.....

தன்னைத் தானே கேள்விக் கேட்டுக் கொள்பவனே சிறந்த புத்திசாலி........... என்றார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலம்....

நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் வேத அறிவு வழங்கப் பட்டவர்களிடம் கேள்விக் கேட்டு தெறிந்துக் கொள்ளுங்கள்..... ( 16 : 43 ) என்கிறான் இறைவன்....

ஆஹா கேள்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதா? நன்றி அஷ்ரஃப் இனி யாரைப் பார்த்தாலும் கேள்விக் கேட்டு குடைந்துவிட வேண்டியதுதான் என்று கிளம்பி விடாதிற்கள்......

அதற்கு முன் கேள்வி என்றால் என்ன?

எதை கேட்கவேண்டும்?
அதை எப்படி கேட்கவேண்டும்?
அதை யாரிடம் கேட்கவேண்டும்?
இதுபோன்ற கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்தாக வேண்டும்........

ஏனெனில் ஒரு மனிதனை யார் என்று அறிய இரண்டு விதமான வழிகள் உண்டு....

01. அவனுடைய நண்பர்கள் யார் என்று அறிந்துக் கொள்வது... இது அவனுடைய நடத்தையை வெளிப்படுத்தும்...

02. அவனுடைய கேள்விகள் என்னென்ன என்று அறிந்துக் கோள்வது.... இது அவனுடைய அறிவை வெளிப்படுத்தும்.....

எது அறிவார்ந்த கேள்வி என்று அறிந்து கொள்ள கீழ்வரும் துணுக்கை ஒர் அளவுகோலாக கொள்ளலாம் :

ஓயாமல் கேள்விக் கேட்பவன் ஓட்டைவாயன்....

தேவையில்லாததை கேட்பவன் மூடன்....

இழிவானவற்றை கேட்பவன் மோசமானவன்.....

தெரிநதுக் கொண்டே கேட்பவன் கலகக்காரன்.....

தெரிந்துக் கொண்டதாக நினைத்து கொண்டு கேட்பவன் அறிவற்றவன்.....

தெரிந்துக் கொள்ள விறும்பி துடித்துடித்து கேட்பவன் அவசரக்காரன்.....

அறிய வேண்டியதை அறிந்துக் கொள்ள விறும்பி தகுதியுடையவர்களை அனுகி அமைதியாக கேட்டு அறிபவனே அறிஞன்....

இன்றைய உலகில் நேர்கானல் என்றால் பிரபலங்கள் தான் நியாபகம் வருவார்கள்..... அவர்களீடத்தில் கேட்கும் கேள்வியும் வீனானவைதான்..... அவர்கள் கூரும் பதிலும் வீனானவைதான்.....

அறிவு வளர்ச்சி பெறாத 1400 ஆண்டுகளுக்கு முன் கூட இதுப் போன்ற நேர்கானல் நடந்துள்ளது....

நேர்கானல் செய்யப்பட்டவர் மெத்த படித்த மேதாவி அல்ல..... தன் பெயரையே எழுத தெரியாத எழுதப் படிக்க தெரியாதவர்.....

நேர்கானல் செய்தவர்களும் `` ஜார்னலிஸம் `` படித்தவர்கள் அல்ல..பள்ளி படிக்கட்டுகளையே ஏராத பாமரர்கள்......

அன்னாலும் அந்த நேர்கானலில் சமுதாயத்தை முன்னெடுத்து  செல்லும் பல விடயங்கள் நிரம்பியுள்ளன....

இதோ அந்த பேட்டி :

புறம் என்றால் என்ன?
ஒருவன் தன்னைப் பற்றி எதை பிறரிடம் சொல்ல விரும்ப மாட்டானோ அதைப் பற்றி பிறரிடம் சொல்வதே புறம்..... ( முஸ்லிம் )

பாவம் என்றால் என்ன?
எதை செய்யும் போது மந்தில் உருத்தல் ஏற்படுகிறதோ அதுதான் பாவம்......( முஸ்லிம் )

கர்வம் என்றால் என்ன?
அழகியல் நோக்கு கர்வம் அல்ல. உண்மையை மறுப்பதோடு பிறரை தாழ்வாக எண்ணுவதே கர்வம்......( முஸ்லிம் )

சிறந்த ஜிஹாத் எது?
அநியாயம் செய்யும் அதிகாரிக்கு முன் சத்தியத்தை துணிந்து எடுத்துறைப்பதே சிறந்த ஜிஹாத்....... ( திர்மீதி )

சிறந்த வீரன் யார்?
தன் கோபத்தை அடக்கிக் கொள்பவனே சிறந்த வீரன்....... ( புஹாரி )

ஒருவன் நல்லவனா? கெட்டவனா? என்பதை எதை வைத்து முடிவு செய்வது?
அது அவனது அண்டை வீட்டார் அவனைப் பற்றி தரும் `` ஸ்டேட்மண்டை `` வைத்து முடிவு செய்ய வேண்டும்..... ( இப்னுமாஜா )

எவ்வளவு அழகான கேள்விகள் அவற்றிற்கு எவ்வளவு அழகான பதில்கள்.......

படிக்கும் போதே புல்லரிக்கிறது.....

இதைபோன்றா இன்றைய இஸ்லாமிய சமுதாயம் கேள்வியை கேட்கிறது?

எண்ணுடைய தோழி எண்ணிடம் ஒரு கேள்வியை கேட்டாள்.......

``தேவா முகத்திறை அணியலாமா? `` என்று

நான் சொன்னேன் `` அது உண் விறுப்பம் மார்கம் முகத்திறை அணிவதை கடமையாக்கவில்லை ஆயினும் உனக்கு பிடித்திறுந்தால் அணிந்துக் கொள்ளலாம் `` என்றேன்?

இது ஒரு பெண் கேட்கவேண்டிய சரியான கேள்வி.......

என் நண்பர் ஒருவர் எண்ணிடம் ஒரு கேள்வியை கேட்டார் :

`` அஷ்ரஃப் பெருனாள் தொழுகைக்கு டிரஸ் எடுக்கனும் சரவணா ஸ்டோர் போலாமா? அல்லது ஜெய சந்திரன் போலாமா? `` என்று.....

இது என்ன கேள்வி?????

இப்படிதான் மார்கத்தில் உள்ள பலப் பேர் தேவையற்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.....

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜை பற்றி உறை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.... அப்போது ஒரு சஹாபி எழுந்து `` செல்வந்தர்கள் ஒவ்வொரு வருடமும் ஹஜ் பன்னனுமா? `` என்று கேட்டார் நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்து விட்டார்கள்...... மீண்டும் அதே கேள்வியை கேட்டார் அந்த சஹாபி....... நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்துவிட்டார்கள்....... பின்பு உரை முடிந்தவுடன் தன் தோழர்களை அழைத்து கூரினார்கள் `` தோழர்களே நான் மிம்பரில் இருக்கும்  போது இதுபோன்ற கேள்விகளை கேட்காதிர்கள்....  நான் ஆம் என்று சொல்லிவிட்டால் வருடாவருடம் செல்வந்தர்களுக்கு ஹஜ் கடமை ஆயிடும்..... அதனால இந்தமாதிரியான கேள்விகளை தவிர்த்துக் கொள்ளுங்கள் `` என்று கூரினார்கள்....

ஆக மார்கத்தில் அனுமதிக்க பட்ட கேள்விகள் ஞானத்தை வளர்க்கும், அனுமதிக்கப் படாத கேள்விகள் ஞானசூணியத்தை வளர்க்கும்....

தற்ப்போது நம் இஸ்லாமிய சமுதாய மக்கள் கேட்கும் கேள்விகளை சற்று எண்ணிப் பாருங்கள் :

`` தொழுகைல விரல ஆட்டலாமா? வேண்டாமா? ``

`` முகத்திரை அணியலாமா? அணீயக் கூடாதா? ``

`` தொப்பி போடாலாமா? போடக் கூடாதா? ``

`` இறைவனுக்கு உறுவம் இருக்கா இல்லையா? ``

`` தராவீஹ் தொழலாமா? தொழக்கூடாதா? ``

`` பெண்கள் பள்ளிக்கு செல்லலாமா? செல்லக்கூடாதா? ``

இப்படிப்பட்ட கருத்துவேறுபாட்டிற்கு இட்டு செல்லும் கேள்விகளை தான் கேட்டு கொண்டிருக்கிறார்கள்.....

இஸ்லாத்தின் அடிப்படை பற்றி யாரும் கேள்விக் கேட்டு தெறிந்துக் கொள்வதில்லை.......

இந்த நிலை எந்தளவிற்கு கேவளமாக உள்ளது என்றால் சில தினங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையின் போஸ்டரை பார்த்தேன் அதில் இப்படி ஒரு கேள்வி :

`` தி.மு.க. வுக்கு ஓட்டுப் போடுவது ஃபர்லான கடமையா? ``

இந்த சமுதாயத்தின் அறிவு எந்த அளவுக்கு மக்கிப் போயிருக்கின்றது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.......

அறியாமையின் திறவுகோல் கேள்வி என்றார்கள் நபி (ஸல்)......

கேள்வி கேட்பது என்பது ஒரு கலை....

நீங்கள் கேட்கும் கேள்வி கேட்கும் உங்களுக்கும், பதில் தருபவருக்கும், பயனுள்ளதாக இருக்கவேண்டும்.......

கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்க கூடிய கேள்விகளை தவிர்த்து விடுங்கள்.........

தேவையில்லாத கேள்விகளை கேட்காதிர்கள்.... அது உங்கள் ஞானத்தை கெடுத்துவிடும்......

கேள்வியின் மூலம் எல்லாவற்றையும் நம்மால் அறிந்துக் கொள்ளமுடியாது.....

உதாரனத்திற்கு ஒரு கல் உப்புவில் எத்தனை அனுக்கள் உள்ளன என்று யாருக்காவது தெறியுமா? விஞ்ஞானம் கூட இதை நிறுபிக்கவில்லை........

ஆகையால் கேள்வியால் அனைத்தையும் தெரிந்துக் கொள்ள முடியாது..... எனவே ஒரு சில விடயங்களை பற்றி கேட்காமலேயே இருப்பதுதான் சிறந்தது....


இறைவா எனக்கு ஞானம் இல்லாததைப் பற்றி உன்னிடம் கேட்பதிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன்....... ஆமீன்......

No comments:

Post a Comment