Thursday, July 10, 2014

உலகத்தின் முதல் பல்கலைக் கழகம் இஸ்லாமிய பெண்களின் சாதனைகள்.....

உலக அரங்கிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் சரி பெண்களுக்கு எங்கேயும் கல்வி மறுக்கப்பட்டதில்லை.
உண்மையை சொன்னால் இஸ்லாத்தின் வரலாற்றிலும், மனித வரலாற்றிலும் இஸ்லாமிய பெண்கள் கல்வித்துறையில் ஆற்றிய சேவைக்கு அளவேயில்லை.....

அவர்கள் சிறந்த கல்வியாளர்களாக திகழ்ந்திருக்கிறார்கள்....

தற்ப்போதும் கூட அந்த சேவை மலர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது...

ஆஃப்கானிஸ்தானில்கூட பெண்கலுக்கு கல்வி தாராலாமாக கிடைக்கிறது என்று அங்கு சென்று நேரடியாக ஆய்வு செய்த யுவான்னி ரிட்லி என்ற சகோதரி `` தாலிபானின் பிடியில் `` எனும் தனது புத்தகத்தில் கூரியுள்ளார்..

இறைவனின் இறுதித் தூதரின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூட தனது கடைசி நாட்களை கல்வியை பரப்புவதிலேயே செலவிட்டார்கள்...

இப்படி இஸ்லாமிய வரலாற்றில் எந்த பகுதியிலும் இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதேயில்லை...

இஸ்லாமிய பெண்கள் கல்வியை பெறுவதில் ஆண்களுக்கு நிகராக நின்றார்கள்... ஒரு சில கால கட்டங்களில் ஆண்களை விஞ்சியும் நின்றார்கள் என்பதே உண்மை......

 இப்போ  என்னாதான் சொல்லவர....... அப்புடினு நீங்க கேக்குறது எனக்கு புரியுது.... சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்....

UNESCO : UNITED NATIONS EDUCATIONAL SOCIAL CULTURAL ORGANISATION என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, கலாச்சார பிரிவு  கல்வி ஆய்வு ஒன்று நடத்தியது.... இந்த ஆய்வில் திடுக்கிடும் பல உண்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன..

யுனேஸ்க்கோ அறிக்கையின் சுருக்கம்:

மொரோக்கோ நாடின் மூன்றாம் முக்கிய நகரம் `` பெஸ் ``.

இங்கு ஒன்பதாம் நூற்றாண்டில் `` முஹம்மது பின் அப்துல்லாஹ் அலீஃபிக்ரி `` எனும் மிகப்பெரிய வியாபாரி வாழ்ந்து வந்தார்...
இவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் பெயர் `` ஃபாத்திமா ``. இன்னொருவர் பெயர் `` மர்யம் ``.

இருவருக்கும் தன் தந்தையிடமிருந்து மிக பெரியதொரு செல்வம் வாரிசுரிமையாக கிடைத்தது....

கிடைத்த இந்த செல்வத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய தயக்கம் கொஞ்சமும் இருக்கவில்லை ஃபாத்திமாவுக்கு...

முதன் முதலில் அந்த செல்வத்தை கொண்டு அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் தொழுவதர்க்கு ஒரு பள்ளிவாசலை கட்டுவது என முடிவு செய்தாள்... பள்ளிவாசலை கட்டும் பணியை தொடங்கினாள்...  பள்ளிவாசல் பணி முடியும்வரை அல்லாஹ்வுக்காக நோன்பிருப்பது என முடிவு செய்தாள்.

பள்ளிவாசல் பணி முடிந்தது....  அந்த பள்ளிவாசலில் எல்லாம் வல்ல இறைவனை தொழ ஆரம்பித்தார்கள்...  தொழுகைக்காக பள்ளிவாசலை பயன்படுத்தியதோடு அல்லாமல் பள்ளிவாசலை பள்ளிக்கூடமாகவும் மாற்றினார்கள்....  பின் அந்த பள்ளிவாசல் பல்கலைகழகமாக மாரியது....

அன்று முதல் அது `` அல்கராவுன் பல்கலைகழகம் `` என பெயர்ப் பெற்றது..  கி.பி.859-ல் நிறுவப்பட்ட முதல் பல்கலைகழகம் என்ற பெயரையும் பெற்றது...

உலகின் முதல் பல்கலைக் கழகம் என்று நமக்கு அறிமுகப்படுத்தப்படுவது இத்தாலியிலுள்ள `` போலாங்னா பல்கலைக் கழகம் `` தான்.

இந்த பல்கலைக் கழகம் கி.பி.1088-ல் தான் தொடங்கப்பெற்றது.. ஆனால் இந்த பல்கலைக் கழகம் நிறுவுவதற்கு 229 ஆண்டுகளுக்கு முன்னரே நம் இஸ்லாமிய பெண்கள் பல்கலைக் கழகத்தை நிறுவி அதில் கல்வியை கற்றுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அன்று அந்த இரண்டு இஸ்லாமிய பெண்கள் ஆரம்பித்த `` அல்கராவுன் `` என்ற உலகின் முதல் பல்கலைக் கழகம் இன்று வரை சிரப்பாக செயல்ப்பட்டு வருகிறது... அல்ஹம்துலில்லாஹ்.....  அல்லாஹு அக்பர்......

கல்விக்கான திறவுகோலை முதன் முதலில் இந்த உலகுக்கு கொடுத்ததே இஸ்லாமிய பெண்கள்தான் என்று வரலாறு இருக்கும் போது..

இஸ்லாத்தில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்படுகிறது என்று சிலர் கூரிக் கொண்டிருப்பது அவர்களின் அறியாமையைதான் காட்டுகிறது..

அன்று மட்டும் அல்ல இன்றும் கல்வியில் இஸ்லாமிய பெண்கள்தான் முன்னிலையில் நிற்கின்றனர்...

இதற்க்கு ஒர் எடுத்துக் காட்டு பல எடுத்துகாட்டுகள் உள்ளன ஆனால் நான் ஒன்றை மட்டும் கூருகிறேன்......

டாக்டர் யூசஃப் அல் கர்லாவி இவரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது...   தற்போதைய இஸ்லாமிய உலகின் தலை சிறந்த  இஸ்லாமிய அறிஞர்... இவருடைய மகள் `` லண்டனின் நம்பர் ஒன் விஞ்ஞானி `` என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

இன்னும் சொல்லப்போனால் இவருடைய தலைமையில்தான் லண்டனுடைய விஞ்ஞான குழுவே இயங்கிக் கொண்டிருக்கிறது....

இஸ்லாமியத்தில் பெண்களின் கல்வி நிலை எந்த அளவுக்கு உள்ளது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

இன்னும் அருள் மறை குர் - ஆன் கூருகிறது :


`` தான் நாடியவருக்கு அவன் ஞானத்தை கொடுக்கின்றான். இத்தகு ஞானம் எவருக்கு கொடுக்கப்படுகிறதோ அவர் நிச்சயமாக கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக ஆகிவிடுகிறார். எனினும் நல்லறிவுடையோர் தவிர இதை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. `` ( 2:269 )

No comments:

Post a Comment