Thursday, July 10, 2014

ஆணும் பெண்ணும் ஜோடிகள்தான் : எதிரிகள் அல்ல!

ஆணும் பெண்ணும் ஜோடிகள்தான் : எதிரிகள் அல்ல!



உலகில் உள்ள பல்வேறு மதங்களும் நாகரிகங்களும் ஆணையும் பெண்ணையும் எதிரிகளாகவே சித்தரிக்கின்றன.

ஆதியில் பாவம் செய்வதற்கு முக்கிய காரணமாயிருந்தது பெண்தான் எனவே பெண்கள் பிசாசுக்குரியவர்கள் அவர்கள் ஆண்களின் எதிரிகள் என்று போதிக்கிறது கிருஸ்த்தவம்..

பெண் என்பவள் மனித குலத்தின் மாபெரும் சாபம்... அவள் ஆணுக்கு அடிமையாகவே இருக்கவேண்டும் ஒரு ஆண் பெண்ணை என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று கூருகிறது இந்து மதம்.....

கடவுளின் கையில் ஒரு பெட்டி இருந்ததாகவும் அந்த பெட்டியில் ஷைத்தானை கடவுள் அடைத்து வைத்திருந்ததாகவும் அதை ஒரு பெண் திறந்ததாகவும் அதனால் ஷைத்தான் வெளிப்பட்டு மனிதர்களை அழிக்கிறான் என்றும் இதனால் பெண் கடவுளின் சாபத்துக்குள்ளானாள் என்றும் பாரசீக நாகரீகம் போதிக்கிறது...

இப்படி உலகத்தின் எந்த பக்கம் திரும்பினாலும் பெண்களை ஆண்களின் எதிரிகளாகவும், அடிமைகளாகவும், கடவுளின் சாபத்திற்க்குறியவளாகவும், ஷைத்தானின் தோழியாகவும் சித்தரிக்கும் மனிதர்களின் கற்ப்பனையில் உதித்த மார்கங்களுக்கு முன்னால் இறைவனின் மார்கமாகிய இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் பற்றி என்ன கூருகிறது என்பதை பார்ப்பொம்.....




மூடும் இரவின் மீது சத்தியமாக, பிராகாசம் வெளிப்படும் பகலின் மீது சத்தியமாக, ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக, (அல் - குர் - ஆன் : 92;1-3)

கால ஓட்டத்திற்க்காக இரவையும் பகலையும் அல்லாஹ் படைத்திருப்பதைப் போல்
வாழ்க்கை ஓட்டத்திற்க்காக ஆணையும் பெண்ணையும் படைத்திருக்கிறான்.

பகலுக்கு இரவு ஜோடியாக இருப்பதைபோல், ஆணுக்கு பெண் ஜோடி என்கிறது அருள்மறை குர் - ஆன்.

இரவும் பகலும் இல்லாமல் எவ்வாறு உலகம் இயங்காதோ அதுபோல, ஆணும் பெண்ணும் இல்லாமல் நிலைக்காது மனித வாழ்வு என்கிறது இஸ்லாம்.

இறைவன் கூருகின்றான் :

அவர்களுடைய இறைவன் அவர்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்.
உங்களில் ஆணோ பெண்ணோ நற்செயல் செய்தாலும் அவர் செய்த செயலை நிச்சயமாக நான் வீனாக்கமாட்டேன், ஏனேனில் ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பினும் ஒருவர் மற்றொருவரில் நின்றும் உள்ளவர்தாம். (அல் - குர் - ஆன் : 3;195)

என்பது அல்லாஹ்வின் வாக்காகும்.

அதாவது பெண் ஆணிலிருந்தும் ஆண் பெண்ணிலிருந்தும் உருவாகியிருக்கிறார்கள்.
வாழ்க்கை போராட்டத்தில் ஆணின்றி பெண்ணோ பெண்ணின்றி ஆணோ வாழமுடியாது.
ஒருவர் மற்றொருவரை சார்ந்து வாழ்பவரே.
எனவேதான் இஸ்லாம் மற்ற மதங்களை போல்  பெண் ஆணின் விரோதி என்றோ ஆண் பெண்ணின் விரோதி என்றோ கற்ப்பிக்கவில்லை..

மாறாக ஒருவரின் குறையை இன்னொருவர் நிவர்த்தி செய்துக் கொள்பவர்களாகவே ஆக்கிவைத்திருக்கின்றது...

இதைத்தான் இறைவன் தன் திருமறையில் இவ்வாரு கூறுகின்றான் :

`` அவர் அமதி கான்பதற்க்காக அவரிலிருந்தே அவரது மனைவியை படைத்தான் ``
(அல் - குர் - ஆன் : 7;189)



ஆணின் உள அமைதியும் நேசமும் பெண்ணின் மூலமே நிறைவு பெறும் என்பதால் ஆணுக்கு ஜோடியாக பெண் படைக்கப்பட்டாள் என்பதுதான் இதன் பொருள்.

எல்லாம் வல்ல இறைவன் இந்த பிரபன்சத்தில் உள்ள அனைத்தையும் ஜோடிகளாகவே படைத்துள்ளான்.

அனைத்து பொருட்களிலும் இந்த ஜோடி அமைப்புண்டு.

உதாரணத்திற்கு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதிலும் நேரேற்றம் - எதிரேற்றம் என்ற அமைப்புகளுண்டு.....

இது போலவே மனித இனத்திலும் ஆணையும் பெண்ணையும் நேர் எதிரேற்றங்களாக கனிக்க முடியும்...

எனவே மற்ற மதங்கள் கூருவது போல ஆண் பெண்ணுக்கோ பெண் ஆணுக்கோ எதிரிகள் என்று இஸ்லாம் கூறவில்லை...

இருபாலரும் இணைந்தது தான் வாழ்க்கை இருவரும் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர்தான் என்று கூருகிறது.

இப்போது கூருங்கள் பெண்களை ஆண்களின் எதிரிகளாகவும், அடிமைகளாகவும், கடவுளின் சாபத்திற்க்குறியவளாகவும், ஷைத்தானின் தோழியாகவும் சித்தரிக்கும் மனிதர்களின் கற்ப்பனையில் உதித்த மார்கங்கள் வேண்டுமா?

அல்லது

பெண் ஆணிலிருந்தும் ஆண் பெண்ணிலிருந்தும் உருவாகியிருக்கிறார்கள்.
வாழ்க்கை போராட்டத்தில் ஆணின்றி பெண்ணோ பெண்ணின்றி ஆணோ வாழமுடியாது.
ஒருவர் மற்றொருவரை சார்ந்து வாழ்பவரே.
என்று கூரும் இறைவனின் மார்கம் இஸ்லாம் வேண்டுமா?

முடிவு உங்கள் கையில்................

No comments:

Post a Comment