Sunday, July 13, 2014

மேற்குலகு விரும்பும் மலாலாவும், வேண்டாத நபீலாவும்..!



பாக்கிஸ்தானின் சுவத் பள்ளத்தாக்கு இந்த பகுதியை சேர்ந்த மலாலா என்ற சிறுமி தாலிபான்களால் அவரது பெண்கல்விக்கு ஆதரவான நிலைப்பாட்டினால் தாக்குதலுக்கு ஆளானதாக கூறி மேற்குலகு முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்புது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


அதே சுவத் பள்ளத்தாக்கை சேர்ந்தவர்தான் நபீலா என்ற சிறுமி. அவரது தந்தை அப்துர்ரஹ்மான். சுவத் பள்ளத்தாக்கின் மலைப்பாங்கான ஒரு இடத்தில் நபீலா தன பாட்டி, தந்தையுடன் வசித்து வந்தாள்.
அவள் தங்கள் வீட்டிற்கான காய் கனிகளை பறித்துக்கொண்டிருக்கும்போது கமல்ஹாசனின் அப்பாவி குழந்தைகளையும் பெண்களையும் கொல்லாத அமெரிக்க போர் விமானங்கள் குறிப்பார்த்து குடியிருப்புகளின் மேல் குண்டுமழைகளை பொழிந்தனர். பல அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர் . இது அந்த பகுதிகளில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் என்றாகிவிட்டன. அந்த நாய்களின் குண்டு மழையில் நபீலாவும் படுகாயம் அடைந்தாள்.
அந்த குண்டுமழைகளுக்கு பிறகு உயிருடன் இருந்தவர்கள் உயிரை இழந்தவர்களை தேடினார்கள்.
நபீலா மயக்கமுற்று கிடந்தாள் . அவளை எடுத்துசென்று மருத்துவமனியில் சேர்த்தார்கள். இரத்தம் பெருமளவில் வெளியேறி இருந்தது. இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை.
அந்த அமெரிக்க பயங்கரவாத நாய்கள் வீசிய குண்டு மழையில் வீடுகள் துகள்களாகி போயிருந்தன. அவள் பாட்டி அதாவது கமலஹாசனின் பார்வையில் பயங்கரவாதி கொல்லப்பட்டாள் .
மருத்துவர்கள் நபீலாவிற்கு இன்னும் நுணுக்கமான மருத்துவம் தேவை என்றார்கள். அதனால் அவளை பாக்கிஸ்தானின் தலைநகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினார்கள். இஸ்லாமிய அமைப்புகள் அவரது மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டன. அவள் வேகமாக குணமடைந்தாள். ஆனால் அனாதையானாள்.
டான் என்ற பத்திரிக்கைக்கு இது தெரிய வருகிறது. டான் பத்திரிகை மலாலாவை உலகின் ஒப்பற்ற கல்வி கதாநாயகி ஆக்கிய மீடியாக்கள் ,அதற்கு பணமும் உற்சாகமும் தந்த மேலை நாடுகள் குறிப்பாக அமெரிக்கா ஆகியவை என்ன சொல்கின்றன. நபீலா விவகாரத்திற்கு எனக்கேட்டு கட்டுரைகளை எழுதின.
நபீலா என் அநாதை ஆனாள் என்ற வினாவை அமெரிக்காவை நோக்கி வைத்தது .
நபீலா அமெரிக்காவால் அநாதை ஆக்கப்படும் மழழைகளின் அடையாளந்தான்.
மலாலா காயமடையாமலேயே லண்டனில் சிகிச்சை பெற்றாள். ஆனால் நபீலாக்கள் காயம்பட்டு உயிருக்கு போராடியபோது உலக அரங்கில் குறிப்பாக மலாலாவை கல்வியில் கதாநாயகி ஆக்கியவர்கள் கனைத்துக்கூட காட்டிடவில்லை.
இந்த அனாதைகளுக்கு என்ன பதில் எனக்கேள்விகள் வைக்கப்பட்டன.
அமெரிக்க பயணம்
இன்னும் ஒரு படி மேலே போய் டான் பத்திரிக்கையின் வாசகர்கள் அமெரிக்காவிற்கு நபீலாவை அழைத்துச்சென்று அமெரிக்காவின் செனட் பெருஞ்சபையின் ஒரு நிமிடம் பேசிட அனுமதி கேட்டார்கள்.
மலாலா இந்த செனட் பெருஞ்சபையில் 40 நிமிடங்கள் பேசினாள் என்பது குறிப்பிட தக்கது.
ஆனால் நபீலா விவகாரத்தில் அவள் உரையாற்றிட செனட் பெருஞ்சபை ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் நபீலா ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்பாள் அதற்கு அனுமதி தாருங்கள் விரும்பினால் பதிலும் தாருங்கள் என்றொரு விண்ணப்பத்தை வைத்தார்கள்.
ஆனால் செனட் சபையோ அதன் உறுப்பினர்களோ இதற்கு தயாராக இல்லை.
ஆனால் டான் பத்திரிக்கையின் அமெரிக்க வாசகர்கள். அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து மலாலவைப் போல் நபீலாவும் நடத்தப்பட வேண்டும். மலாலாவிற்கு தரப்பட்ட முக்கியத்துவம் நபீலாவுக்கும் தரப்பட வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்கள்.
இந்நிலையில் ஊடகங்களும் அரசல் புரசலாக செய்திகளை வெளியிட்டன. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிறு சலனம். நபீல என்ன சொல்கிறாள் என்பதை கேட்டுதொலைவோம் என்றொரு முடிவுக்கு வந்தார்கள்.
நபீலா ஒரு அறிக்கையோடு சென்றாள்.
ஆனால் அமெரிக்காவின் நாடாளுமன்ற 435 உறுப்பினர்களில் 5 பேர்கள் மட்டுமே வந்தார்கள். இந்த சந்திப்பு நபீலா போல அநாதை ஆக்கப்பட்டவர்களின் அவலங்களை அறிந்திட பெரிதும் உதவியது. ஊடகங்களால் இந்த செய்தியை ஒரேடியாக மறைத்திட முடியவில்லை என்பதும் முக்கிய காரணம்.
அமெரிக்க அதிபர் ஒபாமா
அடுத்து , நபீலாவுக்குப் பின்னால் நின்ற டான் பத்திரிகை வாசகர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினார்கள்.
அமெரிக்க அதிபர் ஒபாமா மலாலாவை தன்னுடைய அதிபர் மாளிகையில் சந்தித்தார். அதுபோல் நபீலாவுக்கும் ஒரு வாய்ப்பு அதிபர் மாளிகையில் தந்திட வேண்டும் என விண்ணப்பித்து இருந்தார்கள். ஆனால் பயங்கரவாதி ஒபாமா மறுத்துவிட்டார்.
லண்டன் பயணம்
விடவில்லை வாசகர்கள். லண்டன் என்ற ஆங்கில ஏகாதிபத்தியத்தின் தலை நகர் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினார்கள்.
மலாலாவை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மகாராணி எலிசபத் தன்னுடைய அரியணை வீற்றிருக்கும் அபார மாளிகையிலேயே சந்தித்தார்.
பாவம் ! மகாராணி நபீலாவை சந்திக்க முடியாது என மறுத்துவிட்டார்.
எத்துனை போலியானவர்கள் இந்த ஏகாதிபத்தியவாதிகள்.
இவர்கள் எதை சாதிக்கின்றார்களோ இல்லையோ நித்தமும் நபீலாக்கலை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
16 வயதில் 26 பரிசுகளை பெற்றுவிட்டாள் மலாலா.
லண்டனை வசிப்பிடமாக ஆக்கிகொண்டாள்.
இது ஒன்றே போதும் மலாலா அமெரிக்க உளவுத்துறையின் உருவாக்கம் என்பதை அறிந்துக்கொள்ள.

No comments:

Post a Comment