Monday, July 14, 2014

இந்திய சமுதாய சீரமைப்பில் இஸ்லாம். தொடர் - 2

இஸ்லாம் இந்த நாட்டில் தனது ஒளியை உமிழத் துவங்கியபோது இங்கே ஒரு பயங்கரமான தீமை தலைவிரித்து ஆடியது....


அதுதான் `` சதி `` எனும் `` உடங்கட்டை ஏறுதல்...

முஸ்லிம்களும் முஸ்லிம் ஆட்சியாளர்களும் இந்த கொடுமையை களைத்திட இந்த கொடுமையை கண்ட நாள்முதலே முயர்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்....

கண்வன் இறந்துவிட்டால் தொடற்ந்து வாழும் உரிமை மனைவிக்கு இல்லை என்றொரு விதி இங்கே இருந்தது.

இந்த விதி பெண்களை உயிரோடு நெருப்பிட்டு கொளுத்திக் கொண்டிருக்கிறது..

இதற்கு எதிராக அழகிய நடைமுறைகள் பலவற்றை மேற்கொண்டார்கள் முஸ்லிம்கள்..

முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்கள் குடும்ப பெண்களையே அனுப்பி கணவனை இழந்த பெண்களுக்கு ஆறுதலும், ஆலோசனையும் வழங்கி அவர்களை உடன் கட்டை ஏறி கருகி சாம்பலாகும் அனீதியிலிருந்து தடுத்தார்கள்...

இது இங்கு வாழ்ந்த மக்களிடம் போதிய பின்விளைவுகள் ஏற்படுத்திற்று..

நாளுக்கு நாள் உடங்கட்டை ஏறுவோரின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வந்தது...

இந்த உமையை `` பிராங்கோயிஸ் பர்னியர் `` என்ற சமூக ஆர்வலர் தன்னுடைய `` முகலாய சாம்ராஜ்யம் `` என்ற நூலில் கீழ்க்கொண்டவாரு குறிப்பிடுகின்றார்....

முஸ்லிம்களின் ஆட்சி நிலைக் கொண்டபின் உடன் கட்டை ஏறுவோரிண் எண்ணிக்கை பெரிய அளவில் குறந்தது...

காட்டுமிராண்டித்தனமான இந்த பழக்கத்தை முறியடிக்க முஸ்லிம்கள் தங்களால் இயன்றவையெல்லாம் செய்தார்கள். அவர்கள் ஒரு சட்டத்தை இயற்றி இதை தடுக்கவில்லை.
ஏனெனில் இவர்கள் இதர மதங்களின் அனுஷ்டானங்களில் சட்டத்தை காட்டி குருக்கே நிற்க விரும்பவில்லை.
ஆனால் இந்த உடன் கட்டை எறும் முறையை சீரிய ஆலோசனைகள் மூலம் அவர்கள் தடுத்தனர்.
நீண்டகால பிரச்சாரத்திற்கு பிறகு உடங்கட்டை ஏற விரும்பும் பெண்கள் அந்த தகவலை அந்த பகுதியிலுள்ள கவர்னருக்கு சொல்லவேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொண்டார்கள் முஸ்லிம் ஆட்சியாளர்கள்.

இந்த தகவல் கிடைத்தவுடன் அந்த பெண் விருப்பப்பட்டுதான் உடன் கட்டை ஏறுகிறாள் என்பதை ஊர்ஜிதம் செய்துக் கொண்டார் கவர்னர்.
இதனால் சமுதாயத்திலுள்ள சில பிற்போக்குவாதிகள் பெண்களை கட்டாயப் படுத்தி உடன் கட்டை ஏறிட செய்யமுடியவில்லை.....
அந்த பெண் விரும்பி உடன் கட்டை ஏறினாலும் அவர்களது கவனத்தை திறுப்பி தங்களின் பெண்களை கொண்டு அறிவுரைகள் வழங்கினார்கள் முஸ்லிம் ஆட்சியாளர்கள்.

தன் பெண்களோடு வாழவும், அந்த பெண்களை வாழவைக்கவும் வாகுறுதிகளை வழங்கினார்கள்.
இதனால் முஸ்லிம் கவர்னர்கள் நியமிக்கப் பட்ட இடங்களில் உடன் கட்டை ஏறுவது மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் முஸ்லிமல்லாத கவர்னர்கள் நியமிக்கப்பட்ட இடங்களில் உடன் கட்டை ஏறும் வழக்கம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக இராஜ பரம்பரையில் உள்ள பெண்கலும் உடன் கட்டை ஏற்றப்பட்டார்கள்..

Source : Francois Burnier-Travels In Moghol Empire, 1891..page – 306 - 307

உடன் கட்டை ஏறுதல் என்ற பெயரில் இந்த நாட்டு பெண்களை எரி நெரிப்பில் இடப்படுவதிலிருந்த காப்பாற்றிட இத்துனை அக்கறையோடு கடமையாற்றினார்கள் முஸ்லிம்களும், முஸ்லிம் ஆட்சியாளர்களும்...

இந்த வரலாறு ஆறவே மறைக்கப்பட்டது.அத்தோடல்லாமலிஸ்லாம் பெண்களுக்கு எந்த உரிமையையும் வழங்கிடவில்லை.
என்றொரு பழிஸ் சொல் இஸ்லாத்தின் மேல் பாய்ச்சப் பட்டது...
இன்னும் ஒரு படி மேலே போய் பெண்கள் முன்னேரமால் போனதற்கு காரணமே இஸ்லாம்தான் காரணம்தான் என்றும் வசைபாடினார்கள்...

இந்த கொடுமை இன்னும் இந்தியாவில் மறைமுகமாக நடைமுறைப்படுத்த படுகிறது...
இது இந்தியாவிலிருந்து இன்னும் துடைத்தெரியப்படவில்லை....
மீண்டும் இஸ்லாம் ஆட்சியில் அமரும்போது மட்டுமே இந்த தீமை ஒழியும்...

தொடரும்............

No comments:

Post a Comment