Thursday, July 10, 2014

இஸ்லாமிய பெண்ணும் கல்வியும்!!!

நீண்ட நெடுங்காலமாக இஸ்லாத்தின் மீது இஸ்லாத்தின் எதிரிகளாலும் அறியாமையில் இருக்கின்ற ஒரு சில இஸ்லாமியர்களாலும் ஒரு அவதூரு ஒன்று பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது... அது என்னவென்றால் `` இஸ்லாம் பெண்கல்விக்கு தடை விதித்திருக்கிறதாம் ``...

இவர்களின் இந்த கூற்று உண்மையா? இஸ்லாம் உண்மையிலேயே பெண்கல்விக்கு தடைவிதிக்கிறதா? என்பதை ஆராய்வோம்.......

உலக அரங்கிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் சரி பெண்களுக்கு எங்கேயும் கல்வி மறுக்கப்பட்டதில்லை.
உண்மையை சொன்னால் இஸ்லாத்தின் வரலாற்றிலும், மனித வரலாற்றிலும் இஸ்லாமிய பெண்கள் கல்வித்துறையில் ஆற்றிய சேவைக்கு அளவேயில்லை.....

அவர்கள் சிறந்த கல்வியாளர்களாக திகழ்ந்திருக்கிறார்கள்....

தற்ப்போதும் கூட அந்த சேவை மலர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது...



ஆஃப்கானிஸ்தானில்கூட பெண்கலுக்கு கல்வி தாராலாமாக கிடைக்கிறது என்று அங்கு சென்று நேரடியாக ஆய்வு செய்த யுவான்னி ரிட்லி என்ற சகோதரி `` தாலிபானின் பிடியில் `` எனும் தனது புத்தகத்தில் கூரியுள்ளார்..

இறைவனின் இறுதித் தூதரின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூட தனது கடைசி நாட்களை கல்வியை பரப்புவதிலேயே செலவிட்டார்கள்...

இப்படி இஸ்லாமிய வரலாற்றில் எந்த பகுதியிலும் இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதேயில்லை...

இஸ்லாமிய பெண்கள் கல்வியை பெறுவதில் ஆண்களுக்கு நிகராக நின்றார்கள்... ஒரு சில கால கட்டங்களில் ஆண்களை விஞ்சியும் நின்றார்கள் என்பதே உண்மை......



கல்வியை தேடுவதை பொருத்தவரை இஸ்லாம் ஆணுக்கு கடமையாக்கியதை போல பெண்ணுக்கும் இதை கடமையாக்கியிருக்கிறது.

இஸ்லாம் அறிவீனத்தை ஒருபோதும் பெண்கள் மீது தினிக்கவில்லை.

ஆண் பெண் இருபாலரும் கல்வி பெருவது அவர்களின் மீது உள்ள கடமை என்கிறது இஸ்லாம்.

இஸ்லாமிய வரலாற்றில் ஆண்கள் பெண்களிடம் சென்று கல்வி கற்ற காலம் கூட இருந்திருக்கிறது...

ஆயிஷா (ரலி) மற்றும் உம்மு ஸல்மா (ரலி) போன்ற பெண்களிடம் ஆண்கள் சென்று பல ஹதீஸ்களை கேட்டறிந்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இஸ்லாம் தொடர்பான பல அம்சங்களை அவர்களிடம் ஆண்கள் கற்றனர்....

பெரிய பெரிய நபித்தோழர்களும் தாபியீன்களும் கூட அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று கல்வி கற்ப்பதிலும் கேள்விகள் கேட்பதிலும் ஈடுபட்டார்கள்..

அவர்களது கேள்விகளுக்கு பதிலலித்த ஆயிஷா(ரலி) அவர்கள் நபித்தோழர்கள் ஹதீஸ்களை அறிவிக்கும் போது தவறு செய்து விட்டால் திருத்தியும் கொடுத்தார்கள்...

பேரரிஞர் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூட ஸகீனா என்ற பெண்ணிடம் கல்வி கற்க சென்றதாக வரலாறு கூருகிறது...

இப்படி வரலாற்றில் இஸ்லாமிய பெண்கள் கல்விக்கு ஆற்றிய சேவைக்கு அளவேயில்லை.

இன்னும் சொல்லப்போனால் உலகத்திலேயே முதன் முதலில் `` பல்கலைக் கழகத்தை `` தோற்றுவித்ததே இஸ்லாமிய பெண்கள் தான்.
( பார்க்க என்னுடைய பதிவு `` உலகத்தின் முதல் பல்கலைக் கழகம் இஸ்லாமிய பெண்களின் சாதனை`` )

இப்படி வரலாற்றில் திரும்பிய திசையெல்லாம் இஸ்லாமிய பெண்கள் கல்வியில் சாதித்திறுக்கிறார்கள்.....



சரி தற்போதைய கால கட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிவோம்.

வரலாற்றில் சாதித்ததை போலவே தற்போதும் இஸ்லாமிய பெண்கள் கல்வியில் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஈராக்கில் `` சதாம் ஹுசைனின் `` ஆட்சியில் 1500 க்கும் மேற்ப்பட்ட பெண் விஞ்ஞானிகள் இருந்தார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...

அவர்களின் கல்வியின் ஞானத்தை பார்த்து மிரண்டது அமெரிக்கா...

அதனால்தான் அத்தனை பேரையும் `` கவுண்டானாமா சிறையில் `` வைத்து சித்திரவாதை செய்து கொலை செய்தது  அமெரிக்கா. ( இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ரஜீவூன் )

இது மட்டுமா?

 அன்றும் சரி, இன்றும் சரி, நரம்பியல் நிபுனர் என்றாலே உலகத்திற்கே நினைவில் வருவது இஸ்லாமிய பெண்தான்...

ஆம். அவள் பெயர் `` ஆஃபியா சித்திக் ``

இளம் வயது முதலே நன்றாக படித்து பின் அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற கல்வி நிறுவனமாகிய  `` MACHACHUTE INSTITUTE OF TECHNOLOGY (MIT) `` என்ற நிறுவனத்தில் `` முது நிலை டாக்டர் `` பட்டம் வென்றவள்.

தலை சிறந்த நரம்பியல் நிபுனர். இவரை நரம்பியல் நிபுனர் என்று அழைப்பவர்களைவிட நரம்பியல் விஞ்ஞானி என்று அழைப்பவர்கள்தான் அதிகம்.



ஆனால் இவரின் கல்வி ஞானத்தை கண்டு அலறிய அமெரிக்கா ஆஃபியாவை `` கவுண்டானாமா சிறையில் `` வைத்து சித்திற்வாதை செய்தனர்... மேலும் தீவிரவாதி என்று முத்திறையும் குத்தினர்.. ( இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ரஜீவூன் )

இப்படி ஏராளமான உதாரணங்களை காட்டிக்கொண்டே போகலாம்.

லண்டனின் நம்பர் விஞ்ஞானி ஒரு இஸ்லாமிய பெண்தான்.

அவருடைய தலமையில்தான் பிரிட்டனுடைய விஞ்ஞானக் குழுவே இயங்கிக் கொண்டிருக்கிறது... (அல்ஹம்துலில்லாஹ்)

ஏன் உலகத்தை சுற்ற வேண்டும் நாம் வாழ்கின்ற தமிழ் நாட்டில் தற்போது நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்தே ஒரு இஸ்லாமிய பெண்தான்.




இப்போது புரிகிறாதா? இஸ்லாமிய பெண்கள் கல்வியில் உலகத்தை மின்சியவர்கள் என்று....

இருதியாக இஸ்லாமிய பெண்களுக்கு ஒன்றை கூரிக் கொள்ள விரும்புகிறேண்..

இஸ்லாமிய பெண்களே இஸ்லாம் உங்களுக்கு கல்வி கற்பதை கடமையாக்கியிருக்கிறது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

`` கல்வியை பெறுவது ஒவ்வொறு முஸ்லிமின் மீதும் கடமையக உள்ளது என்று ``

ஆதலால் நீங்கள் கல்வியை தாராலமாக பெற்றுக்கொள்ளலாம்..

ஆனால் ஒரு நிபந்தனை நீங்கள் கற்கும் கல்வி இஸ்லாத்திற்க்கும், உங்களது மருமை வாழ்க்கைக்கும் பயன்படக்கூடியதாக இருக்கவேண்டும்.

இப்படிபட்ட கல்வியை இஸ்லாம் உங்கள் மீது கடமையாக்கியிருக்கிறது..

ஆதலால் உங்கள் பெற்றோர் உங்கள் கல்விக்கு தடையாக நின்றால் நீங்கள் அவர்களிடத்தில் தைரியமாக கேட்கலாம் `` அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் எனக்கு விதித்த கடமையை செய்ய கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? `` என்று.


இறைவன் நம் அனைவருக்கும் கல்வியின் ஞானத்தை அதிகமாக வழங்குவானாஹ....... ஆமீன்........

No comments:

Post a Comment